ஒரு காட்டில் ஒரு ஆண் பெண் பறவைகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. பெண் பறவை கரு தரித்து முட்டை இட ஆரம்பித்தது. இரு பறவைகளும் தாய் தந்தை ஆக போவதை நினைத்து மிகவும் ஆனந்தமாக இருந்தன. ஒரு நாள் இரையை தேடுவதற்காக இரு பறவைகளும் கூட்டை விட்டு வெளியே சென்றன. அந்த சமயம் மரத்தின் கீழ் இருந்த ஒரு பாம்பு இது தான் சமயம் என்று மரத்தின் மேல் ஏறி அனைத்து முட்டைகளையும் தின்று விட்டது.
திரும்பி வந்த பறவைகள் கூட்டில் முட்டை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தன. பெண் பறவை கண்ணீர் வீட்டு அழுது புலம்பியது. ஆண் பறவை ஆறுதல் கூறி சமாதானம் செய்தது....
இப்படி முட்டைகளை பல முறை பறவைகள் இழந்தன. கடைசியாக அந்த பறவைகள் முட்டைகளை எடுத்து செல்வது மரத்தின் கீழ் உள்ள பாம்புதான் என்று கண்டுபிடித்தன. ஆனால் பாம்பை எதிர்த்து விரட்டும் அளவுக்கு நமக்கு சக்தி இல்லையே என்று பெண் பறவை அழுதது. நாம் இங்கிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு சென்று விடலாம் என்று ஆலோசனை கூறியது பெண் பறவை.
அதற்கு ஆண் பறவை நாம் புதிதாக செல்லும் இடத்திலும் வேறு ஏதாவது துன்பம் நேரிட்டால் அங்கிருந்து வெளியேறுவாயா என்று கேள்வி எழுப்பியது. இங்கேயே இருந்து இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை யோசிப்போம் என்றது ஆண் பறவை.
பிறகு ஆண் பறவை தன் நண்பனான நரியிடம் சென்று, “நண்பா நரியாரே! என் மனைவி இடும் முட்டைகளை எல்லாம் ஒரு பாம்பு தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு ஒரு உபாயம் நீங்கள் தான் சொல்ல வேண்டும்”, என்றது.
நரி சிறிது நேரம் யோசித்து ஒரு யோசனை கூறியது. “பறவையே! நீ அரசரின் மாளிகைக்கு சென்று அங்கு மகாராணி அணிந்திருக்கும் விலையுர்ந்த இரத்தின மாலை அல்லது வைர மாலையை கவர்ந்து கொண்டு இந்த பாம்பின் பொந்துக்குள் போட்டு விடு.” என்றது. அதே போல் ஆண்பறவை மகாராணியின் இரத்தின மாலையை கவர்ந்து பறந்தது, காவலாளிகள் அந்த பறவையை பின் தொடர்ந்து ஒடினர்.
பறவை பாம்பின் பொந்தை நெருங்கியவுடன் இரத்தின மாலையை பொந்திற்குள் போட்டுவிட்டு சென்றது. காவலாளிகள் பொந்தின் அருகே சென்று தன் கையில் உள்ள ஈட்டியால் பொந்திற்குள் விட்டு இரத்தின மாலையை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது பொந்திற்குள் இருந்த பாம்பு கோபத்துடன் சீறி வெளியே வந்தது. பாம்பை கண்ட காவலாளிகள் தங்கள் கையில் வைத்திருந்த ஈட்டியால் பாம்பினை தாக்கினர். பாம்பும் அங்கேயே இறந்துபோனது.
மரத்தின் மேலிருந்த பறவைகள் இந்த காட்சிகளை கண்டு ஆனந்தத்தில் திளைத்தன. சிறிது காலம் கழித்து அந்த பறவைகள் தன் சேய் பறவைகளோடு ஆனந்தமாக வாழ்ந்தன. கஷ்டத்தை கண்டு பயந்து ஓடினால் பிரச்சனைதான் பெரியதாகும்.
keywords : tamil stories, fairy tales in tamil, short stories in tamil, kids stories in tamil, moral stories in tamil, tamil thriller short stories, tamil sirukathaigal, tamil stories for kids, siruvar kutti kathaigal in tamil, neethi kathaigal in tamil, folk tales in tamil, சிறுகதைகள், குட்டிக்கதைகள், சிறுவர் கதைகள், குழந்தைகளுக்கான சிறுகதைகள், தன்னம்பிக்கை சிறுகதைகள், நீதிக்கதைகள்.
சிறுகதைகள் படியுங்கள்
keywords : tamil stories, fairy tales in tamil, short stories in tamil, kids stories in tamil, moral stories in tamil, tamil thriller short stories, tamil sirukathaigal, tamil stories for kids, siruvar kutti kathaigal in tamil, neethi kathaigal in tamil, folk tales in tamil, சிறுகதைகள், குட்டிக்கதைகள், சிறுவர் கதைகள், குழந்தைகளுக்கான சிறுகதைகள், தன்னம்பிக்கை சிறுகதைகள், நீதிக்கதைகள்.